ஆப்கானிஸ்தான் எல்லையில் 30 பயங்கரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தெற்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
துப்பாக்கி சண்டையில் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.