கும்பகோணம் அருகே மின்சார ஒயரில் லாரி உரசியதில், வைக்கோல் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
கும்பகோணம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வண்டுவாஞ்சேரி கிராமத்தில் உள்ள வயலில் இருந்து வைகோல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று, தருமபுரிக்கு புறப்பட்டது.
அப்போது, மின்சார வயரில் லாரி உரசியதில் வைக்கோல் தீ பற்றி எரிந்தது. இதனை பார்த்த ஓட்டுநர் பெரியண்ணன், லாரியை நிறுத்தி, அருகில் இருந்த குளத்தில் வைக்கோல்களை கீழே தள்ளி விட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி வைக்கோல் கட்டுகளில் ஏற்பட்ட தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.