சென்னை பாரிமுனையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாதுகாப்பு உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கம் மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
சக்ஷம் தமிழ்நாடு என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதன், கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய கோவிந்தராஜ்,
மாற்றுத்திறனாளிகளை சமூகம் பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்களுக்கான உரிமை சட்டம் குறித்து அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டுமெனவும் கூறினார்.
மேலும், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகள் இன்னும் அதிகரிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.