அடுத்த தலைமுறைக்கு தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை எடுத்துச் சென்றவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அழிவின் விளிம்பிலிருந்த ஓலைச்சுவடியிலான தமிழ் இலக்கியங்களை நூல் வடிவத்தில் அச்சிட்டு, தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகெங்கும் அறியச் செய்த, தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் இன்று.
மூவாயிரத்துக்கும் அதி கமான ஓலைச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும், பண்டைத் தமிழ் இலக்கியங்களையும் மீட்டு, அச்சிட்டு வெளியிட்டவர்.
அடுத்த தலைமுறைக்கு தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை எடுத்துச் சென்றவர். தமிழ் மொழியைக் காத்து வளர்த்த தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.