சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட லாரி உரிமையாளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருமயத்தை சேர்ந்த ஜெகபர் அலி கனிமகொள்ளை, கல்குவாரிகளுக்கு எதிராகத் புகார் அளித்து வந்தார். இதன் காரணமாக, கடந்த மாதம் லாரி ஏற்றி அவர் படுகொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட லாரி உரிமையாளர் முருகானந்ததின் ஜாமீன் மனுவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.