ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 2 ஆயிரத்து 813 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரகசிய தகவலையடுத்து ராமநாதபுரம் அருகே இடைர்வலசை சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் ஆயிரத்து 680 கிலோ பீடி இலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் விஜய் ஆனந்த் என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பீடி இலைகளும், 47 சுறா இறக்கைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட சலீம் மாலிக், முகமது ஹக்கீம், விஜய் ஆனந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.