2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடங்க அனைத்து பள்ளிகளுக்கும், தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,
அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர்கூட விடுபடாமல் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் கிடைக்கும் சேவைகள், நலத்திட்டங்கள் மற்றும் உதவித் தொகைகள் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும் எனவும், 2025-26ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை உயர்த்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர் விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.