கோவை சூலூர் அருகே கேரளாவுக்கு கடத்தப்படவிருந்த சுமார் 5 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாப்பம்பட்டியில் உள்ள குடோன் ஒன்றில் கேரளாவுக்கு கடத்துவதற்காக எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சோதனை மேற்கொண்டதில் நூற்றுக்கும் மேற்பட்ட கேன்களில் 5 ஆயிரத்து 145 லிட்டர் எரிசாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து எரிசாரயத்தை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.