கன்னியாகுமரியில் மனைவியை வரதட்சணை கொடுமைப்படுத்தி அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி குழித்துறை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நித்திரவிளை அருகேயுள்ள சரல்முக்கு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் – சவுமியா தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், ராஜேஷ் தனது மனைவியை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் குழந்தையுடன் மாம்பழஞ்சியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்ற சவுமியாவுடன் கடந்த 2015-ம் ஆண்டு ராஜேஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ் சவுமியாவை வீடு புகுந்து அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்துள்ளார்.
இந்த கொலை வழக்கில் கணவர் ராஜேஷை போலீசார் கைது செய்த நிலையில், வழக்கு விசாரணை குழித்துறை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ராஜேஷுக்கு கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதற்காக 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தது.