கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மேய்ச்சலுக்காக சாலை வழியாக சென்ற செம்மறி ஆடுகள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 30 ஆடுகள் உயிரிழந்தன.
சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். அவர், தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றபோது பின்னால் வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து ஆடுகள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்த தகவலின்பேரில் ராமநத்தம் போலீசார் லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.