திண்டிவனம் அருகே கடன் தொல்லையால் அரசு பேருந்து ஓட்டுநரின் வீட்டை நோட்டமிட்டு நகைகளை திருடிய உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடுவணந்தல் பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநரான முருகன் வீட்டில், ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு 25 சவரன் நகைகள் திருடப்பட்டன.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடன் தொல்லை காரணமாகவும், புதிய இருசக்கர வாகனம் வாங்கும் ஆசையிலும் அவர்களின் உறவினர் மணிகண்டன் திருட்டில் ஈடுபட்டது அம்பலமானது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.