இந்தியாவிடம் நிறைய பணம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா வழங்கி வந்த 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறை அறிவித்தது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு நிதி உதவியை நிறுத்தியது குறித்து பேசியுள்ள டிரம்ப், இந்தியாவிடம் நிறைய பணம் இருப்பதாகவும், உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும் கூறியுள்ளார். இந்தியா மற்றும் பிரதமர் மோடி மீது தனக்கு மிகுந்த மரியாதை உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.