சீனாவில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் தோன்றிய சூரிய ஒளி பல பகுதிகளை ரம்யமாக காட்சிப்படுத்தி பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய சீனாவின் பல பகுதிகளில் இதுவரையில்லாத அளவு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகள் வெண்பனியால் சூழப்பட்டுள்ளன. இந்நிலையில், கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் அங்கு தோன்றிய சூரிய ஒளி, பல பகுதிகளை ரம்யமாக காட்சிப்படுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவழும் வெண் மேகங்களுக்கு நடுவே பனி படர்ந்த மலைகள், மரங்கள் மற்றும் கட்டடங்கள் மீது சூரிய ஒளி விழுந்த காட்சி உள்ளூர் வாசிகளையும், சுற்றுலா பயணிகளையும் மெய்சிலிர்க்கச் செய்தது.