டெல்லி முதலமைச்சராக பதவியேற்க உள்ள ரேகா குப்தாவுக்கு முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், டெல்லி மக்களுக்கு பாஜக அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் ரேகா குப்தா நிறைவேற்றுவார் என்று நம்புவதாகவும், மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்கான ஒவ்வொரு பணியிலும் ஆதரவளிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.