பெங்களூரில் கூகுள் நிறுவனம் பிரம்மாண்டமான அலுவலகத்தைத் திறந்துள்ளது.
இந்தியாவில் கூடுதல் கிளைகளைத் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கூகுள் நிறுவனம், கிழக்கு பெங்களூரின் மகாதேவபுரா பகுதியில் அனந்தா என்ற பெயரில் புதிதாக அலுவலகம் அமைத்துள்ளது. 10 லட்சத்து 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் வகையில் இந்த அலுவலகம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
இங்கு ஆண்ட்ராய்டு, மேப், கூகுள் டீப் மைண்ட் போன்ற கூகுளின் பல்வேறு பிரிவுகளில் பணி புரியும் ஊழியர்களுக்காக தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எலக்ட்ரோ கிரோமிக் கண்ணாடி கொண்டு அமைக்கப்பட்ட இந்த அலுவலகத்தில், குடிநீரை மறுசுழற்சி செய்யும் வசதியும் உள்ளது.மழை நீர் சேகரிப்பு வசதிகளும் அமைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.