டெல்லி முதல்வராக பதவியேற்கும் ரேகா குப்தாவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், ரேகா ஜியின் குழு டெல்லியை புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்லும் என தெரிவித்துள்ளார்.
மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதிலும், வளர்ச்சி மற்றும் நல்லாட்சியில் புதிய அளவுகோல்களை அமைப்பதிலும் அவர் வெற்றிபெற வாழ்த்துவதாகவும் எல்.முருகன் கூறியுள்ளார்.