ஃபாஸ் டேக் புதிய விதிகள் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி பயனர்களை எந்தவிதத்திலும் பாதிக்காது என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஃபாஸ் டேக் புதிய விதிகளை இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய விதிகளில் சுங்கச்சாவடி பயனர்களுக்கு விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஃபாஸ் டேக் புதிய விதிகள் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி பயனர்களை எந்தவிதத்திலும் பாதிக்காது என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் ஃபாஸ் டேக்கில், எந்த நேரத்திலும் பண இருப்பை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் அனைத்து சுங்கச்சாவடிகளிலும், ஐசிடி 2.5 என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.