கும்பகோணத்தில் மகாமக குளத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கும்பகோணம் மாதுளம் பேட்டை தெருவை சேர்ந்த 4 சிறுவர்கள் நேற்று மகாமக குளக்கரையில் விளையாடி உள்ளனர். அப்போது காவியா என்ற ஐந்து வயது சிறுமி மகாமக குளக்கரையின் படியில் விளையாடிய போது குளத்தில் விழுந்துள்ளார்.
இதனை கவனித்த மற்ற சிறுவர்கள் அக்கம் பக்கத்தில் தெரிவிக்கவே, தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி குளத்தில் தவறி விழுந்த காவியாவின் உடலை மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.