மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், அசிஸ்டன்ட் சர்ஜன் தேர்வு தொடர்பாக நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் முறைகேடுகள் நடைபெற்றதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு 2,642 அசிஸ்டண்ட் சர்ஜன் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிட்டது.
இதில் எம்.பி.பி.எஸ். முடித்து கடந்த ஜூலை மாதம் 15-ஆம் தேதி வரை தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் நிரந்தர பதிவு மேற்கொண்டவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்த வகையில், 18,000 பேர் தேர்வு எழுதிய நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, அதில் 4,500 தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதேவேளையில் வெளிப்படையாக தரவரிசை பட்டியல் வெளியிடாமல் குறிப்பிட்ட நபர்களை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைத்ததாக தேர்வர்கள் குற்றம்சாட்டி, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்
அதில், தகுதியான மருத்துவர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.