சென்னை மெரினா கடற்கரையில் காவலரிடம் இளம்பெண் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மெரினா கடற்கரையில் இரவு நேரத்தில் தனது ஆண் நண்பருடன் இளம்பெண் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர், இருவரும் கணவன் – மனைவியா என கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண், இவ்வாறு கேட்க யார் அதிகாரம் கொடுத்தது எனக்கூறி காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில் சம்மந்தப்பட்ட காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.