சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே குடிநீர் கிணற்றில் கழிவுநீர் கலப்பதாக பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
லாங்கில் பேட்டை கிராமத்தில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக, அங்கு தாழ்வான பகுதியில் உள்ள கிணற்று தண்ணீரை கடந்த 35 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குடிநீர் கிணற்றுக்கு அருகில் செல்லும் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி கிணற்றில் கலந்து வருவதால், தண்ணீர் அசுத்தமடைந்து எண்ணெய் பசையுடன் காணப்படுகிறது. கிணற்று நீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை என்று கூறப்படும் நிலையில், மாவட்ட நிர்வாகம் கிணற்று நீரை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர் .