கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அரசுப் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களிடம் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கூத்தக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 140-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பழைய கட்டத்தை இடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மாணவர்களை வெயிலில் அமரவைத்து ஆசிரியர் பாடம் நடத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.