சிவகங்கையில் அரசு பேருந்தின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அதனை சாதூர்யமாக நிறுத்தி பயணிகளின் உயிரை காத்த ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மானாமதுரையில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன், சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை சலீம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கீழ்க்கண்டனி அருகே முன்பக்க சக்கர டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தறிகெட்டு ஓடியது.
அப்போது சாதூர்யமாக செயல்பட்ட ஓட்டுநர் சலீம், பேருந்தின் வேகத்தை குறைத்து அதனை சாலையோரம் நிறுத்தினார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் காயங்களின்றி உயிர் தப்பியதுடன் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது.