கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேரிவிளை – ஆலங்கோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அங்கு பதுங்கியிருந்த தனிப்படை போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.