வைகை அணையில் இருந்து மதுரை கள்ளந்திரி கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 650 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர் இருப்பை பொறுத்து 40 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அணையின் நீர்வரத்து குறைவாக இருப்பதால் திறக்கப்படும் தண்ணீரை விவசாயிகள் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்துவோர் சிக்கனமாக பயன்படுத்த அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.