காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரின் பல்வேறு பகுதிகளில் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், ராமானுஜரையே ஏமாற்றும் நயவஞ்சகர்களே என்ற தலைப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ஓய்வு பெற்ற ரவிச்சந்திரனை மீண்டும் பணியில் அமர்த்தியது ஏன்? ராமானுஜருக்கு அணிவித்த முத்து மணி மாலை எங்கே? போன்ற கேள்விகள் போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.