சென்னையில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை கத்தியால் குத்திய வழக்கில் கைதான 5 பேருக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 57 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவான்மியூரைச் சேர்ந்த புருஷோத்தமன் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசாக செயல்பட்டு வந்தார். அவர் அப்பகுதியைச் சேர்ந்த சிலரின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு துப்பு கொடுத்த நிலையில், ஆத்திரமடைந்த 5 பேர் கும்பல் அவரை கத்தியால் குத்தியது.
இது தொடர்பான வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 5 பேரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 5 பேருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.57 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.