திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் மின்வாரிய ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டுத்து காவல்நிலையத்தை 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.
கேத்தாண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளம்பருதி என்பவர், நாட்றம்பள்ளி உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சக்கரம் ஏறியதில், பெரியசாமி என்பவரது வீட்டு குடிநீர் பைப் உடைந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பெரியசாமி, இளம்பருதியை தாக்கியுள்ளார். இதுகுறித்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, காவல்நிலையத்தில் போராட்டம் நடைபெற்றது