சேலம் புதிய பேருந்து நிலையத்தில் 4 நாட்களாக நடைமேடை விளக்குகள் எரியாததால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
நாள்தோறும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளும், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளும் வந்து செல்லும் புதிய பேருந்து நிலையத்தில், கடந்த 4 நாட்களாக மின் விளக்குகள் எரியாததால் பேருந்து நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் திருடர்களின் கைவரிசை அதிகரித்து வருவதாக அச்சம் தெரிவித்துள்ள பொதுமக்கள், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.