ஆண்டிபட்டி அருகே காளியம்மன் கோயில் மீது கற்களை வீசி சிலைகளை சேதப்படுத்திய சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மணியாரம்பட்டி கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் உண்டியலை இளைஞர்கள் சிலர் சேதப்படுத்தியதாகவும், அதனை ஊர் பெரியவர்கள் கண்டித்ததாகவும் தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடந்த 17ஆம் தேதி நள்ளிரவு கோயில் மீது செங்கல் மற்றும் கற்களை கொண்டு முன்பக்கத்தில் இருந்த சிலைகளை தேசப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மேலும், சிலைகளை சேதப்படுத்திய வழக்கில் தொடர்புடைய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.