மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ரசாயனம் இல்லாத இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடத்தை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், காளஹஸ்தியில் நடைபெற உள்ள சிவராத்திரி நிகழ்வில் பங்கேற்க, சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து ஆதீன மடத்திலிருந்து சொக்கநாத பெருமானுடன் ஞானரதத்தில் காளஹஸ்திக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக தருமபுரம் ஆதீனத்தில் ரசாயனம் இல்லாத இயற்கை உரம் தயாரிக்கும் மறுசுழற்சி இயந்திரத்தை தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார்.
பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இந்த இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.