புதுச்சேரியில் தனியார் பள்ளி சிறுமி பாலியல் வழக்கு தொடர்பாக தொடர்ந்து அவதூறு செய்திகளை வெளியிட்ட சென்னையை சேர்ந்த யூடியூபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி மணவெளி தொகுதிகுட்பட்ட தானாம்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு பயிலும் ஆறு வயது சிறுமி அதே பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் மணிகண்டன் என்பவரால் பாலியல் சீண்டலுக்கு ஆளானார்.
இதையடுத்து, ஆசிரியர் மணிகண்டனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறுமி பாலியல் சீண்டல் வழக்கை திசை திருப்பும் விதமாக அவதூறாகவும், மீனவ சமுதாய மக்களை இழிவுபடுத்தும் விதமாகவும் தொடர்ந்து செய்தி வெளியிட்ட சென்னையை சேர்ந்த யூடியூபர் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர் .