சீனாவில் வவ்வால் பறவைகளால் பரவக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சீனாவில் உருவான கோவிட்-19 வைரஸால் உலகம் முழுவதும் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டது. SARS-CoV-2 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
இதன் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. உயிரைக் காப்பாற்றி கொண்டால் போதும் என்ற மனநிலைக்கு மக்கள் மாறிய நிலையில், கோவாக்சீன், கோவிஷீல்டு உள்ளிட்ட கொரோனா தடுப்பு மருந்துகளால் மக்கள் காப்பாற்றப்பட்டனர்.
ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை வாழத் தொடங்கிய நிலையில், தற்போது மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வவ்வால் பறவைளால் பரவக்கூடிய, மனிதர்களை பாதிக்கக்கூடிய புதிய வகை கொரானா வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது.
HKU5-CoV-2 என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் மனிதர்களை பாதிக்கும் என்றாலும், அதன் பரவல் வீரியம் கோவிட் 19 வைரஸை விட சற்று குறைவாகவே இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.