20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருந்தால் தான் இருக்கும் இடமே வேறு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் கட்சி கொடியை கமல்ஹாசன் ஏற்றி வைத்தார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
அப்போது, ரசிகர்கள் வேறு; வாக்காளர்கள் வேறு என தற்போது புரிந்து கொண்டு உள்ளதாக தெரிவித்தார். இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்க போவதாகவும், அடுத்த ஆண்டு சட்டப்பேரவையில் நமது குரல் ஒலிக்கும் என்றும் கமல்ஹாசன் கூறினார்.