பாம்பன் புதிய ரயில் பால திறப்பு விழா பணிகள் குறித்து ரயில்வேத்துறை அதிகாரிகள் தலைமையில் ஒத்திகை நடைபெற்றது.
மத்திய அரசு சார்பில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய செங்குத்து தூக்கு பாலம் அமைப்பதற்கு 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது அதற்கான பணிகள் நிறைவு பெற்றது.
இந்த நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா குறித்த ஒத்திகை நிகழ்ச்சி ரயில்வே துறை அதிகாரிகள் தலைமையில் நான்காவது முறையாக நடைபெற்றது.