தஞ்சை மாவட்டம் திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
தனியார் திருமண மண்டபத்தில் தங்கி கல்லூரிக்கு சென்று வருவதாகவும், கழிவறை வசதி, தரமற்ற உணவு என எந்த அடிப்படை வசதிகளும் இல்லையென மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனை கண்டித்து திருவையாறு பேருந்து நிலையம் அருகே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.