விருதுநகர் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
நரிக்குடி பேருந்து நிலையம் அருகே இராமேஸ்வரம் சாலையில் தனியார் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு வந்த இளைஞர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார்.
பணத்தை எடுக்க முடியாததால் இளைஞர் தப்பியோடிய நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதனைதொடர்ந்து சாமியப்பன் என்பவரை கைது செய்தனர்.