ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே டிராக்டர் மீது சுற்றுலா பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
கிழக்கு கடற்கரை சாலையில் கூலி வேலையை முடித்துக் கொண்டு கூலி தொழிலாளிகள் நால்வர் டிராக்டரில் சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது டிராக்டர் மீது சுற்றுலா பேருந்து மோதியதில் டிராக்டரில் பயணித்த துரைசாமி மற்றும் வடிவேல் ஆகிய இரண்டு கூலி தொழிலாளிகள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
காயமடைந்த மற்ற இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.