ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு பள்ளியின் ஆண்டு விழாவை ஒட்டி முன்னாள் மாணவர்கள் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
காடார்ந்த குடியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக வழங்கினர். மேலும் ஆண்டு விழாவில் பள்ளி மாணவர்கள் உற்சாக நடனமிட்டு அசத்தினர்.