சீனாவில் மக்களால் கைவிடப்பட்ட கிராமமொன்று சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.
சீனாவின் ஜெஜியாங்கில் உள்ள ஹௌடோவான் எனும் மீன்பிடி கிராமத்தில் 1990 முதல் மக்கள் தொகை குறைந்துவந்தது. இதனையடுத்து கடந்த 2002-ம் ஆண்டில் மக்கள் அந்த ஊரையே கைவிட்டுவிட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
இந்நிலையில் தற்போது கைவிடப்பட்ட அந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் பாசியும், கொடியும் படர்ந்து பச்சைப் பசேலென காட்சியளிக்கிறது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஹௌடோவான் கிராமத்தை காண சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.