இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா மீண்டும் சிஎஸ்கேவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா விளையாடி வந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
தற்போது தொகுப்பாளராக இருக்கும் சுரேஷ் ரெய்னா மீண்டும் சி.எஸ்.கே. அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி 2025 ஐ.பி.எல். தொடரில் சுரேஷ் ரெய்னா சி.எஸ்.கே. அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.