மின்கட்டணம், கேஸ் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்தும் போது, குறிப்பட்ட தொகையை கட்டணமாக வசூலிக்கப் போவதாக கூகுள் பே நிறுவனம் அறிவித்துள்ளது.
அதாவது, பில் தொகையில் இருந்து 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரையில் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. ஏற்கெனவே மொபைல் ரீசார்ஜூக்கு 3 ரூபாயை சேவை கட்டணமாக கூகுள் பே வசூலித்து வருகிறது. கூகுள் பேயின் அறிவிப்பை தொடர்ந்து, ஆன்லைன் பணப்பரிமாற்ற செயலி நிறுவனங்கள் அடிக்கடி கட்டண வசூல் அறிவிப்பை வெளியிட்டு வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் மட்டும் நாட்டில் ஒட்டுமொத்தமாக 23 லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கு யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், கூகுள் பே-வில் மட்டும் 8 லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கு யுபிஐ பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.