விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை குறைக்கவில்லை என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்திலிருந்து பொது பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அதற்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகள் கும்பமேளாவிற்கு செல்லும் சிறப்பு ரயில்களில் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகா கும்பமேளா முடிந்தவுடன் அந்த பெட்டிகள் தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் ரயில்களில் கூடுதலாக இணைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
14 விரைவு ரயில்களில் அடுத்த மாதம் முதல் கூடுதல் பொது பெட்டிகள் இணைக்கப்படும் என்றும், அதன் மூலம் ஒவ்வொரு ரயிலிலும் பொது பெட்டிகளின் எண்ணிக்கை 4ஆக அதிகரிக்கும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.