இந்தியாவில் மலிவு விலையில் 5G போன்களுக்கான தேவையை கருத்தில் கொண்டு சாம்சங் நிறுவனம் Galaxy F06 மொபைலை அறிமுகம் செய்துள்ளது.
புதிய Galaxy F06 5G மொபைலானது 4GB ரேம் + 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6GB ரேம் + 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் என மொத்தம் 2 வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இவற்றின் விலைகள் முறையே 10 ஆயிரத்து 999 மற்றும் 11 ஆயிரத்து 999 ரூபாயாக உள்ளது. எனினும் நிறுவனம் சில சலுகைகளை வழங்கும் காரணத்தால், இந்த மொபைலை வாங்கும் போது விலை கணிசமாக குறையும்.