அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரனை மேலும் 7 வழக்குகளில் போலீசார் கைது செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பள்ளிக்கரணையில் உள்ள 7 வீடுகளில் திருட்டில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டார்.
மேலும், கொள்ளையடித்த பணத்தில் அவர் சொகுசு கார் வாங்கியதும், பிரியாணி கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஞானசேகரனை 7 திருட்டு வழக்குகளில் கைது செய்த போலீசார், அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.