மியான்மரில் போலி கால் சென்டரில் சிக்கியவர்களை சீனா தனி விமானம் அனுப்பி மீட்டுள்ளது.
தாய்லாந்து-மியான்மர் எல்லையில் சர்வதேச மோசடி கும்பலால் பல போலி கால் சென்டர்கள் செயல்படுகின்றன. அவற்றில் பணிபுரிய பெரும்பாலும் வெளிநாடுகளில் உள்ள வேலையில்லாத பட்டதாரிகள் குறிவைக்கப்படுகின்றனர்.
அவர்கள் பிரபல தொழிலதிபர்கள், பணக்காரர்களை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்த கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில், போலி கால் சென்டரில் பணிபுரிந்த 1,000-க்கும் மேற்பட்ட சீன தொழிலாளர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்து கொண்டு வரப்பட்டனர்.
அங்கிருந்து தனி விமானங்கள் மூலம் அவர்கள் சீனா அழைத்து செல்லப்பட்டனர்.