இந்தோனேஷிய அதிபர் பிரபாவோ சுபியாந்தோவை கண்டித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தோனேஷியாவின் அதிபராக, முன்னாள் ராணுவ அதிகாரி பிரபாவோ சுபியாந்தோ கடந்த அக்டோபரில் பொறுப்பேற்றார். அவர் நாட்டில் நிலவும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ள கடந்த மாதம் உத்தரவிட்டார்.
இதனால் அரசு தரப்பில் வழங்கப்படும் மானியங்கள் நிறுத்தப்பட்டதால், பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து ஜகார்த்தாவில் அதிபருக்கு எதிராக திரண்ட போராட்டக்காரர்கள், இருண்ட இந்தோனேஷியா என்பதை குறிக்கும் வகையில் கறுப்பு உடை அணிந்து, கையில் தீப்பந்தங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.