ராமநாதபுரம் அருகே ரேஷன் கடை ஊழியரின் கன்னத்தில் பெண் காவல் ஆய்வாளர் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் ரேஷன் கடையில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் உயிரிழந்த நிலையில் அதே ஊரில் தனது இரு மகள்கள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தனது கணவரின் தந்தைக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்வது தொடர்பாக ஜெயலட்சுமிக்கும், அவரது கணவரின் சகோதரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்த வந்த ஏர்வாடி காவல் ஆய்வாளர் ஜீவரத்தினம் ஜெயலட்சுமியில் கன்னத்தில் அறைந்துள்ளார்.