தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்திற்குள் செல்லாத பேருந்துகளை தொடர்ந்து 3-வது நாளாக சிறைப்பிடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி, திருச்செந்தூர் சாலையில் செல்லும் பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம் நகருக்குள் செல்லாமல் பயணிகளை புறவழிச்சாலையிலேயே இறக்கி விடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து அப்பகுதியில் சோதனை செய்த மாவட்ட ஆட்சியர் பேருந்துகளுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் நகருக்குள் செல்லாமல் புறவழிச்சாலை வழியாக செல்ல முயன்ற பேருந்துகளை தொடர்ந்து 3-வது நாளாக சிறைப்பிடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அனைத்து பேருந்துகளும் ஸ்ரீவைகுண்டம் நகருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.