தருமபுரம் ஆதீனம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 6-வது அனைத்துலக சைவ சிந்தாந்த மாநாடு மே 3-ஆம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக சென்னை தி.நகரில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம், எஸ்.ஆர்.எம். குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய தருமபுரம் ஆதீனம், மாநாட்டில் ஆயிரத்து 500 கட்டுரையாளர்கள் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்தார். மேலும், கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.